2025 ஜூலை 23, புதன்கிழமை

ஏர் பூட்டு விழா...

Editorial   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேசிய வேலை திட்டமான விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம் எனும் இலங்கை மக்களுக்கான உணவு பாதுகாப்புத்திட்டத்தின் முதலாவது வேலைத்திட்டம்,  திருகோணமலை மாவட்டத்திலுள்ள தம்பலகமம் பகுதியில், சனிக்கிழமை (07) கிழக்கு மாகாண ஆளுநர் ரோரோகித போகொல்லாகம தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இதில் முன்னாள் மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி , மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன் , கிழக்குமாகாண விவசாய பணிப்பாளர் Dr. ஹுசைன், கிழக்குமாகாண சட்ட ஆலோசகர் அணிப் லெப்பை , கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் பிரதி செயலாளர் ஜே.எம். ஹுசைன், மாகாண பிரதம செயலக நிருவாக அதிகாரி திருமதி முரளிதரன் திருகோணமலை மாவட்ட விவசாய பணிப்பாளர் குகதாசன் , திருகோணமலை , முல்லைதீவு மாவட்ட கமநல ஆணையாளர் திரு.புனிதகுமார் , காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் அருதவராஜா , தமபலாகமம் பிரதேச செயலலாளர் உட்பட விவசாய அமைப்பின் தலைவர்கள் ,விவசாயிகள் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்  விவசாயிகளுக்கான உரம் ,விதைகள் , மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன. (படப்பி​டிப்பு- தீஷான் அஹமட்,ஏ.எம்.ஏ.பரீத்,ஒலுமுதீன் கியாஸ் )  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .