2025 மே 29, வியாழக்கிழமை

கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா

George   / 2016 ஜூன் 13 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு  - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 182ஆவது வருடாந்த திருவிழா திருப்பலி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, கொழும்பு துணை ஆயர் வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையினால் இன்று காலை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

காலை முதல் இடம்பெற்ற விசேட ஆராதனைகளை அடுத்து, திருவிழா திருப்பலி நடைபெற்றதுடன் மாலை 5.30 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X