Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
George / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
“காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து, வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.
காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம், மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் பொங்கலுக்கு பின்னராக காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ் உண்ணாவிரதப்போராட்டத்தில் “எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே?, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா வீடு தீரும்புவார்களா?, மைத்திரி - ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை
-அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார்,வடமலை ராஜ்குமார்
தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம், இன்று (30) கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுடைய உறவுகள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இன்று வரை நீதி நியாயம் வழங்கப்படவில்லையெனவும் நீதியை பெற்றுத்தருமாறும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரனிடம் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago