2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கையளிப்பு.....

Thipaan   / 2017 மே 12 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக 1.2 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூரண உபகரண வசதிகளுடன் கூடிய ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியால், இன்று (12) நண்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மூன்று மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையில், 150 கட்டில்களைக் கொண்ட விடுதித் தொகுதி, வைத்திய உபகரணப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, விசேட வைத்திய நிபுணர்களின் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, உரிய உபகரணங்களுடன் கூடிய மகப்பேற்று அறை மற்றும் மகப்பேற்று பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் என்பவற்றைக் கொண்டதாக அமைந்துள்ளது.

(படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X