2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா...

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு பல்கலைக் கழகத்தின் 20ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (10) நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு,வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 893 பேர் இதன்போது பட்டம் பெற்றனர்.

நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கலை கலாசாரம்,வர்த்தக முகாமைத்துவம்,விஞ்ஞான விவசாயம் மருத்துவம் போன்ற துறைகளில் உள்வாரியாக பட்டப்படிப்பை பூர்த்திசெய்த,  221 பேர் முதலாம் கட்டத்திலும் 243 பேர் இரண்டாம் கட்டத்திலும்  245 பேர் மூன்றாம் கட்டத்திலும் பட்டங்களைப் பெற்றனர். நான்காம் கட்டத்தில் வெளிவாரியாக படிப்பைப் பூர்த்திசெய்த 184 பேருக்கும் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பேராசிரியை உமா குமாரசுவாமி விஞ்ஞான கலாநிதிப்பட்டம் பெற்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X