2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடமை பொறுப்பேற்பு...

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக, இன்று காலை (10) கட்சி தலைமையகத்தில் வைத்து தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்ததுடன், கட்சியின் பொதுச்​செயலாளருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  தயாசிறி ஜயசேகரவுக்கு நியமனக் கடிதத்தையும் கையளித்தார்.

நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்ஹ, திலங்க சுமதிபால, லசந்த அழகியவன்ன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X