2025 மே 15, வியாழக்கிழமை

கட்டட திறப்பு விழா…

Editorial   / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா.

டிக்கோயா ( கிளங்கன் )மாவட்ட ஆதார வைத்திய சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிகிக்சை நிலைய கட்டட திறப்பு விழா இன்று (05)  இடம்பெற்றது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மற்றும் இலங்கை ஆறுநாட்டு வேலாளர் சபையினால்  நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டடமானது,  வைத்தியர்கள், தாதியர்களுக்கான ஓய்வறைகள், நோயார்களுக்கான உணவு விடுதி, 28 கட்டல்கள்  உள்ளிட்ட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

டிக்கோயா மாவட்ட வைத்திய சாலையில்  உள்ள கொவிட்- 19  தொற்றார் சிகிச்சை வார்ட்டில் இட நெருக்கடி காரணமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கை ஆறுநாட்டு வேலாளர் சபையினரினால் 80 இலட்சம் ரூபாய் செலவில்  இந்த சிகிச்சை நிலைய புதிய கட்டடம் அமைத்து கையளிக்கப்பட்டது ,

சுகாதார விதிமுறைகளோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை ஆறுநாட்டு வேலாளர் சபையினர்  மற்றும் கிளங்கன்- டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலை  நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .