2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கம்பி வேலியில்…

Editorial   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா பூங்கா வீதியில், இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஓ​ட்டோ, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்திலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஓட்டோ சாரதி காயமடைந்தார். அவ்விடத்தில் குழுமியவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அவர், அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த வவுனியா போக்குவரத்து பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X