Editorial / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்முனை ரோட்டரி கழகம், கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஆயிரம் அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்தது .
இந்த நிகழ்வு அதிபர் எஸ்.இளங்கோவன் தலைமையில் வௌ்ளிக்கிழமை (16) நடைபெற்றது.
நிகழ்வில் கல்முனை ரோட்டரி கழகத்தின் புதிய தலைவர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் , சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ரோட்டரி கழக முன்னாள் தலைவர் றோட்டரியன் எஸ். புஷ்பராஜா ,பொதுச் செயலாளர் றோட்டரியன் எம் சிவபாதசுந்தரம், உறுப்பினர் றோட்டரியன் நாசர் ஆகியோருடன் கோரக்கர் ஆலய உப தலைவரும் ,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளருமான வி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆயிரம் அப்பியாச கொப்பிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
கல்முனை ரோட்டரி கழகத்தின் 22 வது தலைவரான றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தனின் மாவட்டத்திற்கான முதலாவது வேலைத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ( சகா)







21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025