2025 மே 22, வியாழக்கிழமை

கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம்

Kogilavani   / 2017 ஜூலை 18 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

மீள்சுழற்சிக்கான திண்மக் கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பிலான விழிப்பூட்டும் வேலைத்திட்டமொன்று, ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால், இன்றுச்  செவ்வாய்க்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர்கள் மற்றும் பெரியோர்களிடையே, கழிவுகளை முறையாக வகைப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹட்டன் -டிக்கோயா நகரசபை மற்றும் பாலர் பாடசாலை மாணவர்கள்  இணைந்து, மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

கழிவுகளை எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பதாதைகளை ஏந்தியவாறு, ஹட்டன் நகரில் இருந்த கழிவுகளை, மாணவர்களும் நகர சபையினரும் இணைந்து முறையாக அகற்றினர்.

இந்நிகழ்வில், பாலர் பாடசாலை மாணவ, மாணவிகள், பெற்றோர், நகரசபைச் செயலாளர் எஸ்.பிரியதர்சினி, சுகாதாரப் பரிசோதகர் பாலகிருஸ்ணா மற்றும் ஹட்டன் பொலிஸார் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .