2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கவனயீரப்பு…

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஜூன் 03 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

திருகோணமலை, மல்லிகைத்தீவு - பெரியவெளிப் கிராமத்தில் எட்டு வயது சிறுமிகள் மூவரை வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென, வலியுறுத்தியும் மட்டக்களப்பில் கவனயீரப்புப் போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு இளைஞர்களின் ஏற்பாட்டில், காந்தி பூங்கா முன்றலில் இன்று (03) காலை நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில், மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் இளைஞர் - யுவதிகள் கலந்துகொண்டனர். குறித்த கனனயீரப்புப் போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளும் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்.

மல்லிகைத்தீவு, பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மான வேலையில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற எட்டு வயது சிறுமிகள் மூவரை வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து கவனயீரப்பு போராட்டம்  நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X