2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காடு வளர்ப்போம்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச, பிரசன்ன பத்மசிறி

இராவணா எல்ல காட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெருமளவிலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ள நிலையில், காட்டில் மீள்நடுகை வேலைத்திட்டமொன்று, ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணவர்தன தலைமையில், இன்று (1) முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி வனப்பரப்பில், மூன்று தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

இராவணா எல்ல கற்குகைச் சுற்றுவட்டப் பகுதியானது, 1,000த்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவர்ந்தப் பிரதேசமாக அமைந்துள்ளது. எனவே காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டப் பிரதேசத்தைச் சுற்றுத்தலமாக அபிவிருத்திச் செய்யும் நோக்கில், மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைவாக சுமார் 1,000க்கும் மேற்பட்ட சுதேச இனத் தாவரங்கள்  மீள் நடுகைச் செய்யப்பட்டன என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரநடுகை வேலைத்திட்டத்தில், ஊவா மாகாண சபை, எல்ல பிரதேச சபை, இராணுவ வீரர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .