2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்...

Editorial   / 2022 டிசெம்பர் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில், இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணிகளுக்குரிய தமிழ்மக்கள்  இன்று (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கேப்பாப்புலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணிகளுக்குரிய தமிழ் மக்கள், “எமது நிலம் எமக்குவேண்டும்”, “இராணுவமே வெளியேறு”, “எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம்”, “கேப்பாப்புலவு எமது பூர்வீக கிராமம்”, “இனவழிப்பு யுத்தம் முடிந்து 14ஆண்டகள் கேப்பாப்புலவு மக்கள் இன்னமும் அகதிகளாக வீதிகளில்”, “ஸ்ரீ லங்கா இராணும் இன அழிப்பு இராணுவம் ”உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு, கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் விஜயகுமார், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விஜயரத்தினம் சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .