2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காந்திபூங்காவில் நடிகர் விவேக்….

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபைக்கும்   மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கும், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் விவேக்,  இன்று (13) விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை  நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக்கை, மாநகரசபைக்கு வருமாறு, மேயர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவுக்கு வருகை தந்த நடிகர் விவேக்கை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா. உதயகுமார்,  மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், பிரதி மேயர் ஏ.சத்திய சீலன், மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் எனப் பலரும் வரவேற்றனர்.

தொடர்ந்து நடிகர் விவேக்,  அங்குள்ள  மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மலர் மாலை அணிந்து, மரியாதை செலுத்தியதையடுத்து, தனது வருகைக்கான நினைவாக மரக்கன்றை நாட்டிவைத்தார்.

(படப்பிடிப்பு: கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஷ்ணா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X