Freelancer / 2023 மே 25 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், அமைச்சர் ஜீவன் தொண்டமானை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்புவில் உள்ள அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள கிராமங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். வடக்கின் தற்போதைய நிலைவரம் பற்றியும் அவர் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.




26 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
37 minute ago
1 hours ago