2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

குமாரபுரம் படுகொலை நினைவுதினம்…

Editorial   / 2023 பெப்ரவரி 12 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை  (11.02.2023 ) குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 இதன்போது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பொதுமக்கள்  மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதையும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா மற்றும் கற்பிணித்தாய் உட்பட தனது உறவினர்கள் ஏழுபேரை பலிகொடுத்த பிரியா உரையாற்றுவதையும், நினைவுத் தூபியில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வையும் கலந்துகொண்ட மக்களையும் படங்களில் காணலாம்.

கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் 11.02.1996ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X