2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொடியேற்ற விழாவும் நினைவு முத்திரை வெளியீடும்

Editorial   / 2022 ஜனவரி 07 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}





கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவை முன்னிட்டு 25 ரூபாய் பெறுமதியான நினைவு முத்திரை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் என்பவற்றின் நிர்வாக சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (06) மாலை, பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்ற இம்முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் விசேட அழைப்பின் பேரில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு முத்திரையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். (படங்களும் தகவலும் அஸ்லம் எஸ்.மௌலானா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .