2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் திறப்பு

Kogilavani   / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், காலி முகத்திடலுக்கு எதிரே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷங்ரிலா ஹோட்டலை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று (16) திறந்து வைத்தார்.

உலகளாவிய ரீதியில் ஷங்ரிலா ஹோட்டல் குழுமத்துக்குச் சொந்தமான 101 ஆவது ஹோட்டலாக கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகளைக்கொண்ட இந்த ஹோட்டல் 41 விசேட தங்கும் விடுதிகள், 34 சொகுசு அறைகள் உட்பட 541 அறைகளை கொண்டுள்ளது.

ஹோட்டலின் நினைவுப் பலகையைத் திரை நீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றைப் பதிவு செய்ததுடன், 32 ஆவது மாடியிலுள்ள காட்சிக்கூடத்திலிருந்து சுற்றுச்சூழலைப் பார்வையிட்டார்.

ஷங்ரிலா ஆசியா நிறுவனத்தின் தலைவர் Hui kuok ஜனாதிபதிளுக்கு விசேட நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, ஷங்ரிலா ஆசிய பிரதம நிறைவேற்று அதிகாரி Lim Beng Chee, ஸ்ரீ லங்கா ஹோட்டல் குழுமத்தின் பணிப்பாளர் Sajjad Mawzoon ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X