2025 மே 21, புதன்கிழமை

கோர விபத்து…

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தல், பத்துளுஓயா உடப்பு சந்தியில் இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பஸ் நடத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனரென, உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், குருநாகல் வீதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய எரங்க கிரிசாந்த் பர்ணான்டோ ( வயது 34) என்பவ​ரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து சிலாபம், உடப்பு நோக்கிச் சென்ற சிறிய லொறியொன்றும் மோதியதில், இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

(படங்கள்: முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின், க.மகாதேவன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X