2025 மே 21, புதன்கிழமை

கௌரவிப்பு…

Editorial   / 2017 செப்டெம்பர் 30 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் உள்ள முதுபெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள், ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இலண்டன் அகிலன் பவுன்டேசனின் அனுசரணையில், புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, கிரான்குளம் சீமூன் கார்டனில் இன்று (30) நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ பெ.பாரதிராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், இலண்டன் அகிலன் பவுன்டேசனின் ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணன், இலங்கைக்கான இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட கலைஞர்கள், பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூத்த கலைஞர்கள், இளம் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட 30 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தால் இயக்குநர் சிகரம் சினிமா சிற்பி என்னும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X