Princiya Dixci / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய மாநாடு மாலை 5.30க்கு நிறைவடைந்தது.
முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் போஷகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமரும் போஷகருமான டி.எம்.ஜயரத்ன ஆகியோரும் பங்கேற்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான பிரபா கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் பங்கேற்றிருந்தார். (படப்பிடிப்பு: தமித் விக்கிரமசிங்க)






33 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
49 minute ago