2025 மே 26, திங்கட்கிழமை

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 61 பேரின் நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவரான இராசேந்திரன் மகிழ்வதனியின் சகோதரி இராசேந்திரம் காந்தறூபி பிரதான சுடரை ஏற்றினார்.

யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜயரட்ணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் நினைவுச் சுடரை ஏற்றினார்கள்.

தொடர்ந்து மதத் தலைவர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் நினைவுச் சுடர்களை ஏந்தி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X