Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.கோகுலன்
பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள சுற்று வட்டத்தில், கடந்த 20 ஆம் திகதிமுதல் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வரும் சகோதரிகள் இருவரும், நேற்றுத் திங்கட்கிழமை ஹல்துமுல்லை பிரதேச செயலக வளாகத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு, மாகந்த முகாமில் 23 மாதங்களாக வாழ்ந்து வரும் தமக்கு, புதிய வீடமைப்புத் திட்டத்துக்கமைய நிரற்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி இருவரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விருவரையும் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர், பிரதேச செயலகத்துக்கு வருகைத்தருமாறு கூறியுள்ளார். சகோதரிகள் இருவரும், நேற்றுத் திங்கட்கிழமை பிரதேச செயலக காரியாலயத்துக்குச் சென்றபோதிலும் அங்கு பிரதேச செயலாளர் வருகைத்தராமையால், அவர்கள் பிரதேச செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இவர்களது சத்தியாக்கிரக போராட்டம் நேற்றுத் திங்கட்கிழமை 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து. மீரியபெத்த தோட்டத்தில் இரு குடும்பங்களாக இரு வீடுகளில் வாழ்ந்து வந்த இவர்கள், மண்சரிவில் சிக்குண்டு தமது உறவுகளையும் உடமைகளையும் பறிகொடுத்த நிலையிலேயே குறித்த முகாமில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை கையளிப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த சகோதரிகள் இருவரில் ஒருவருக்கு மாத்திரமே வீடு கிடைக்கப்போவதாக பிரதேச செயலகம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சகோதரிகள் இருவரும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago