2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சந்திப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் நாட்டின் தேசிய பாதுகாப்புக் கல்லுாரியின் குழுவினர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை, இராணுவ தலைமையகத்தில் வைத்து அண்மையில், சந்தித்தனர்.

இந்தக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் எஸ்.எம் சவூயிடீன் அகமட், பிரிகேடியர் ஜெனரல் அபு தகர் முகமட் இப்ராகிம் சிரேஷ்ட பணிப்பாளராகவும், பிரிகேடியர் ஜெனரல் பைசிட் சர்வர், கொமடோர் எஸ் அஸ்லாம் பாவஷ்  ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்தக் குழுவில், பங்களாதேஷைச் சேர்ந்த 21 இராணுவத்தினரும் 2 கடற்படையினரும், விமானப்படை வீரரொருவரும்  5 சிவில் பாதுகாப்பு , மீளாய்வு மற்றும் பீடத்தின் வெளிநாட்டு மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த குழுவினர்களுக்கு இராணுவ தளபதியால், நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்தத் தேசிய பாதுகாப்பு கல்லுாரியின் குழுவினருக்கு, கடந்த காலங்களில் இராணுவத்தால், பயங்கரவாதத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விளக்கத்தை  நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணரத்ன நடாத்தினார்.

இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர, இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி.வி ரவிபிரிய இராணுவ தளபதியின் சந்திப்பின் போது இணைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X