2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

சந்திப்பு...

Freelancer   / 2021 ஜூன் 29 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (25 ஜூன்) அமைச்சில் வைத்து சந்தித்தார்.

கலாநிதி. சிங்கை இலங்கைக்கு வரவேற்ற அமைச்சர் 1952 ஆம் ஆண்டில் கொழும்பில் நிறுவப்பட்ட முதல் ஐ.நா. நிறுவனமான உலக சுகாதார அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தார்.

கொவிட் -19 தொற்றுநோயின் போது இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் அளித்த உதவியை பாராட்டிய அவர் இலங்கை மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவதில் தொடர்ச்சியான ஆதரவுகளைக் கோரினார்.

கொவிட் -19 சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் உலக சுகாதார நிறுவனத்துடன் வலுவான ஒற்றுமையுடன் நின்ற முதல் நாடுகளில் இலங்கையும் காணப்பட்டமையை அமைச்சர் குணவர்தன நினைவு கூர்ந்தார்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X