Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேச்சுவார்த்தை மூலம் இழுத்தடிக்கப்பட்டு வரும் தொழிலாளர்களின் கூட்டொப்பந்தம் உடனடியாக கைச்சாத்திடப்பட வேண்டுமெனவும், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் கோரி, பொகவந்தலாவை, மஸ்கெலியா, லக்ஷபான ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுத் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சம்பள பேச்சுவார்த்தைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயபூர்வமான சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, மேற்படித் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிற்iசாக்கு முன்பாக இன்றுத் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முதலாளிமார் சம்மேளனத்திடம் கையளிப்பதற்காக மகஜரொன்றையும் தோட்ட அதிகாரியிடம் சமர்பித்தனர்.
பின்தள்ளப்பட்டிருக்கும் சம்பள பேச்சுவார்த்தை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதற்கென ஒரு வாரகால அவகாசத்தை தாம் தோட்ட நிர்வாகத்துக்கு வழங்குவதாகவும் தொழிலாளர்கள் இதன்போது கூறினர்.
ஒருவார காலத்துக்குள் தீர்வுகள் எட்டப்படாவிடின், உண்ணாவிரத போராட்டத்திலும், ஈடுப்படபோவதாக தெரிவித்தனர்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago