2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சமூர்த்தி கேட்டு ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

மூன்று மாதங்களுக்கான சமூர்த்தி நிவாரணக் கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறு கோரி, இரத்தினபுரி மாவட்ட சமூர்த்தி பயனாளிகள், இரத்தினபுரி நகர மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக, இன்று (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி பவித்திரா தேவி வன்னியாராய்ச்சி தலைமயில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணம், கடந்த 3 மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரினர்.

இவ்வார்ப்பாட்டத்தில், சுமார் 500இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .