Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1,200 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி, ஹட்டன், வெலிஓயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று, வெலிஓயாவிலிருந்து கொழும்பு தலைநகருக்கு, பாதயாத்திரையொன்றை இன்று (23) ஆரம்பித்தது.
இந்தப் பாதயாத்திரை, பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து ஆரம்பமானதுடன், பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூதபாணி ஆலயத்தின் முன்பாக, சிதறு தேங்காய் உடைத்ததன் பின்னர், கொழும்பை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
இந்தக் குழுவில் 13 இளைஞர்கள் உள்ளடங்குவதோடு, இவர்களுக்கு ஆதரவாக ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் பங்கேற்க முடியுமென்று, பாதயாத்திரைக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
பாதயாத்திரை, எதிர்வரும் ஞாயிற்றுகிழமை, கொழும்பை வந்தடையுமென்று எதிர்பார்ப்பதாக, அக்குழுவின் தலைவர் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1,200 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும், இவ்விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே, பாதயாத்திரை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு, மலையக மக்களும் வாக்களித்துள்ளனர் என்று நினைவூட்டிய அவர், எனவேதான், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில், நாட்டின் தலைவர்கள் தலையிட வேண்டுமென்று வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago