2025 மே 08, வியாழக்கிழமை

சர்வதேசத்திடம் நீதி கோரி வீடுகளில் போராட்டம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி,  சர்வதேசத்திடம் நீதி கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று (30),  வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்சியாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதை கவனத்திற்கொண்டு, தத்தமது வீடுகளில் இருந்தவாறு, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, தமது வீடுகளில் நீதி கோரிய வாசகங்களை தாங்கிய வண்ணம், நீதியின் குறியீடாக மெழுகுவர்த்தி ஒளி ஏற்றி, இன்றைய நாளை அடையாளப்படுத்தி, இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

'நாங்கள் இலங்கை அரசை நம்பவில்லை', 'சர்வதேச விசாரணையே வேண்டும்', 'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வருவது எப்போது?', 'உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?',  'கால அவகாசம் வேண்டாம் - முறையான நீதி விசாரணையே வேண்டும்'  போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை, உறவினர்கள் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X