2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாதமலையில் ’சுத்தமான இலங்கை’ திட்டம்

Janu   / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் 'கிலின் ஸ்ரீ லங்கா  தேசிய வேலைத்திட்டத்தின்  ஒரு சிறப்பு கட்டம், வியாழக்கிழமை (19) அன்று  மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சிவனொளி வளாகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

வியாழக்கிழமை (19) காலை 5.45 மணிக்கு தொடங்கிய இந்த சுத்தம் செய்யும் பணியில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன்போது சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், ஒழுக்கமான முறையில் யாத்திரை மேற்கொள்வதிலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக சிறப்பு மேடை நாடகமும் நிகழ்த்தப்பட்டது.

சிவனொளிபாதமலை போன்ற உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வக் குழுக்களும் அரசு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றினர்.

எஸ்.சதீஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .