2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சவப்பெட்டி எரிப்பு…

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவின் ஏற்பாட்டில், இன்று (05) முன்னெடுக்கப்பட்ட விழிப்பூட்டல் பேரணியில், போதைப்பொருள் அரக்கனின் சவப்பெட்டி எரிக்கப்பட்டது.

“போதைப்பொருளை ஒழிப்போம், புதிய யுகத்தைப் படைப்போம்” எனும் மகுடத்திலான இப்பேரணி, கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கங்கள், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலைய மாணவர்களின்  பங்கேற்புடன் நடைபெற்றது.

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பிரதான வீதியூடாக  பஸ் நியைத்தைச் சென்றடைந்து, அங்கிருந்து நிறைவாக கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

இதன்போது தெருக்கூத்து, போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சத்தியப் பிரமாணம் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றன.

(படப்பிடிப்பு: ஏ.எல்.எம்.ஷினாஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X