2025 ஜூலை 23, புதன்கிழமை

சாகித்திய விழா…

Editorial   / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, இன்று (07) காலை ஆரம்பமாகியுள்ளது.

“அறிவு பெருக்கி ஆற்றல் மிகுவோம்” எனும் தொனிப்பொருளில், மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, நுவரெலியா பழைய கடை வீதி முற்றத்தில் ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதில், மத்திய மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரச முக்கியஸ்தர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த சாகித்திய விழா, மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார, தமிழ் கல்வி அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பெரியசாமி சந்திரசேகரன், சு.திருச்செந்தூரன் மற்றும் திருமதி.சந்திரகுமாரி கணபதி, முருகேசு சுவாமிகள் ஆகியோரின் பெயரில் அரங்குகளும், துறைசார்ந்தோர் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெறயிருக்கின்றன. (படப்பிடிப்பு: எஸ்.கணேசன், டி.சந்ரூ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .