2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி - உடுவில் மாணவிகள் சந்திப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுவில் மகளிர் கல்லூரியில் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸை நீக்கயமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்த மாணவிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, மகஜர் ஒன்றை வழங்கினர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுவிட்டுப் புறப்படும் போது ஜனாதிபதியைச் சந்தித்த மாணவிகள் தங்கள் பிரச்சினைகளைக்கூறி காலில் வீழ்ந்து அழுதனர்.

அதன் பின்னர் தாங்கள் கொண்டு வந்த மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்தனர். முன்னைய அதிபரை நீக்கித் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் இதன்போது குறிப்பிட்டனர். (படப்பிடிப்பு: எஸ்.ஜெகநாதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .