Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆரச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட சுதேவ ஹெட்டிஆரச்சி , தமது கடமைகளை எதிர்வரும் வாரத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டிஆரச்சி, அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.
25 வருடகால ஊடக வாழ்வில் பிரபலமான அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் முக்கிய ஊடக நிறுவனங்களில் உதவி முகாமையாளராகவும் முகாமையாளராகவும், உதவி பொது முகாமையாளராகவும் பொது முகாமையாளராகவும் பணிப்பாளராகவும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பதவிவகித்த திறமையான நிர்வாக அதிகாரியாவார்.
சுதேவ ஹெட்டிஆரச்சி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்னர் சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்தார்.
9 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago