2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டயகம சிறுமிக்காக கம்பன்பிலவும் களத்தில்

Editorial   / 2021 ஜூலை 29 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிவித்துரு ஹெல உறுமயவின்   இளைஞர் பிரிவு  'ஹிஷாலினிக்கு நீதி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள்' என்ற தலைப்பில் ஒரு விளிப்புணர்வு செயற்பாட்டை இன்று (29)காலை முன்னெடுத்தது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட அந்த செயற்பாட்டில், வலுசக்தி அமைச்சர் உதயபிரபாத் கம்மன்பிலவும் கலந்துகொண்டார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த தலவாக்கலை-டகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தை அடுத்து, அவருக்கு நீதிக்கோரி பல்வேறான செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், மீண்டும் மரண பரிசோதனைகளை செய்வதற்காக, அச்சிறுமியின் பூதவுடல், நாளை (30) மீண்டும் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுமியின் பூதவுடல் புதைக்கப்பட்டிருக்கும் பொது மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .