Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சம்பள உயர்வை வலியுறுத்தி, மலையகத்தில் ஆறாவது நாளாகவும், இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பத்தனை மவுண்ட்வேர்ணன், திம்புள்ள ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள், பத்தனை சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தொழிலாளர்கள் பிரதான வீதியில் டயர்களை எரிக்க முற்பட்டபோது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தினர். இதேவேளை, எரியூட்டப்பட்ட டயரை அணைக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தீ காயங்களுக்கும் உள்ளானார்.இவரது கைகளில் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும், பத்தனை கெலிவத்தை தோட்டத்திலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கெலிவத்தை தோட்ட மக்கள் குறித்த தோட்டத்தின் ஆலயத்தின் முன்றலில் 10 தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago