2025 மே 24, சனிக்கிழமை

தூய நீருக்காக...

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை புனித மேரி தேவாலயத்தில், கடற்படையினரால் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவின் பணிப்புக்கு அமைய, கடற்படையினரால், நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக, சிறுநீரக நோய் பாதிப்பு காணப்படும் பிரதேசங்களில், இவ்வாறான நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்ட பேராயர் ​ஜஸ்டின் பேர்ணாட் ஞானபிரகாசம் அடிகாளாரின் கோரிக்கைக்கு அமைய, ஊர்காவற்றுறை புனித மேரி தேவாலயத்தில், இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X