2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்...

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் வலயக் கல்விப் பிரிவிலுள்ள வானல வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்பாக இன்று புதன்கிழமை (08) காலை, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பிரதான வீதிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையால் கல்வி அமைச்சு மற்றும் அங்குள்ள காணி அமைச்சு அதிகாரிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சற்று அமைதியற்ற நிலமை ஏற்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: பொன் ஆனந்தம், பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமார்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .