2025 மே 24, சனிக்கிழமை

தசாப்த மாநாடு…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10ஆவது மாநாடு, வியட்நாம் –ஹனோயில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (21) வரை இடம்பெறவுள்ளது.

கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 300க்கு மேற்பட்டவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

“2030ஆம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறை புதிய யுகம் படைக்கும்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்று வருகின்ற இம்மாநாட்டை, சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாட்டுக்காக இலங்கையிலுருந்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாணக் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X