Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 11:59 - 1 - {{hitsCtrl.values.hits}}
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் உள்ளிட்ட அனர்த்தங்கள் இடம்பெற்றால், அதனை வைத்தியசாலை எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்வு, மிகவும் தத்ரூபமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று (20) இடம்பெற்றது.
களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு முன்னால் கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் தத்ரூபமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு விபத்தில் எவ்வாறு காயப்பட்டவர்களை மீட்பது, நோய்காவு வண்டியில் எவ்வாறு கொண்டு செல்வது, வைத்தியசாலையில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது, பதிவுகளை மேற்கொள்ளவது, உள்ளிட்ட பல விடையங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டன.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் அனத்த பாதுகாப்புப் பிரிவினர், பொதுமக்கள், களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பார்வையாளர்களுக்கும் விழிப்புணர்வூட்டிய இந்த தத்ரூபமான அனர்த்த ஒத்திகை நிகழ்வு படிப்பினைக்குரியதாக இருந்தமை சிறப்பம்சமாகும்.
(படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)
9 hours ago
23 Jul 2025
P.sasikaran Wednesday, 20 September 2017 03:40 PM
நல்லதொரு திட்டம்: இதன் மூலம் வாகனங்கள் மற்றும் சாரதிகள் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன் மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட நல்லதொரு செயற்பாடாக காணப்படுகின்றது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jul 2025