Mayu / 2026 மார்ச் 31 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் "ஈழத்து காந்தி" தந்தை செல்வநாயகம் அவர்களின் 128-வது பிறந்ததின (ஜனனதினம்) நிகழ்வு, இன்று (31) மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிழ்வு, மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளைத் தலைவரும், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள்: இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத்,
கல்வியியலாளர்கள்: கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் நடராசா புஸ்பராசா,
தமிழரசுக் கட்சியின் மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்:

நிகழ்வின் போது, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது தந்தை செல்வாவின் அரசியல் கொள்கைகள் மற்றும் தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புகள் குறித்து நினைவு கூரப்பட்டது.

21 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
1 hours ago