2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

தமிழ்நாட்டுக்குத் திரும்பினர்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 38 பேரும், நேற்று (04) சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோரக் காவற்படையினரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் வலக்கொலக தெரிவித்தார்.

கடந்த 31ஆம் திகதி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட 30 மீனவர்களும், மன்னார் மாவட்ட நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடலோரக் காவற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் வைத்துக் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .