Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் படி கோரி, தலவாக்கலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் ஏற்பாட்டில், இன்று (23) மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும், ஆசிரியர்கள், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என, பல கட்சி முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயதுக்கு அருகில், தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமான போராட்ட பேரணி, தலவாக்கலை கொத்மலை வீதி ஊடாக தலவாக்கலை நகரசபை மைதானம் வரை சென்றடைந்தது.
நியாயமான சம்பள உயர்வு கோரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் சென்றதை இதன்போது காணக்கூடியதாக இருந்தது.
பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில், இடம்பெற்ற இந்தப் போராட்டத்திற்கு தலவாக்கலை நகரவாசிகள் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி, ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025