Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இறுதி மகாவலி திட்டமான மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்தை அடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய மழை காலநிலையுடன் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் நீரத்தேக்கத்தில் முழுமையாக நீர் நிறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் வரட்சி காலநிலையிலும் எவ்வித தடையுமின்றி சிறுபோகம் மற்றும் பெரும் போகங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ரஜரட்ட விவசாய சமூகங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
இன்று (12) முற்பகல் மகாவலி அதிகார சபைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்குள்ள கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago