2025 மே 15, வியாழக்கிழமை

தியாகி அறக்கொடை

Editorial   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகர் வா. தியாகேந்திரனின் பெரும் நிதிப் பங்களிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பெளதீக சிகிச்சைப் பிரிவுத் திறப்பு விழா(Physiotherapy Unit) கடந்த சனிக்கிழமை(ஜூலை 31) முற்பகல்-10.15 மணி முதல் எளிமையாக நடைபெற்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வே. கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகர் வா. தியாகேந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

 வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். மோகனகுமார் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து தியாகி அறக்கொடை நிலையத்தின் தலைவர் சுபநேரத்தில் நாடாவெட்டி மேற்படி சிகிச்சை நிலையத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் புதிதாக அமைக்கப்பட்ட மேற்படி வைத்தியசாலையின் பெளதீக சிகிச்சைப் பிரிவைப் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை மண்டபத்தில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வே. கமலநாதன் தலைமையில் விருந்தினர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றன.

 இதன்போது தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைச் சமூகத்தின் சார்பில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வே. கமலநாதனால் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டதுடன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் நினைவுப் பரிசிலை வழங்கிக் கெளரவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். மோகனகுமார் ஆகியோர் தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகரின் பல்வேறு சமூகப் பணிகளையும் பெரிதும் மெச்சிப் பேசினர். குறிப்பாக மருத்துவ சேவைக்கு அவரின் பங்கு அளப்பரியது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .