2025 ஜூலை 24, வியாழக்கிழமை

திருகோணமலை வளாகத்தின் சர்வதேச மாநாடு…

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு, ரிங்கோ - 2017,  திருகோணமலை வளாகக் கேட்போர் கூடத்தில், முதல்வர் கலாநிதி வீ. கனகசிங்கம் தலைமையில் நேற்றும் (13) இன்றும் (14) இடம்பெற்றது.

இந்த சர்வதேச மாநாடு “இன்று எம்மிடையே காணப்படும் வளங்களை நாளைய நலனுக்காகப் பயன்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பண்டார போஹொல்லாகமவும், சிறப்பு அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வாவும், கௌரவ விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் கலாநிதி கே.ஈ. கருணாகரனும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .