2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தொம்பே சபையின் புதிய தலைவர் பதவியேற்பு...

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவராக காரியப்பெருமகே பியசேன, விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (29) பதவியேற்றார்.

தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மிலான் ஜயதிலக, கடந்த பொதுத் தேர்தலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குத்  தெரிவானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், காரியப்பெருமகே பியசேன அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியேற்பு நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X