Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 மார்ச் 22 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஹமீத் அல் ஹுசேனி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை முகாமைத்துவ குழுவுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை (18) முற்பகல் மாளிகாவத்தை செரண்டிப் உற்சவ மண்டபத்தில் 'நன்றியுணர்வு நாள்'நிகழ்வை நடத்தியது.
இந்த பாடசாலையில் கல்வி கற்று தற்போது ஏனைய பாடசாலைகளில் அதிபர்களாக மற்றும் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பழைய மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
ஹமீத் அல் ஹுசேனி தேசிய கல்லூரியில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்று செல்லும் அதிபர் A. K. T அத்ஹான் , புதிய அதிபர் எம். ஆர். ரிஸ்கி வரவேற்கப்பட்டனர். இந்த பாடசாலையில் கல்வி கற்று தற்போது ஏனைய பாடசாலைகளில் அதிபர்களாக மற்றும் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பழைய மாணவர்கள்,பாடசாலையில் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கிய ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கல்லூரியின் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான எஸ். எஸ். யூ. ஜெய்னுல் ஆப்தீன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்லூரிகள் பழைய மாணவரும் நீர்கொழும்பு வெளிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபருமான எம். இஸட். ஷாஜஹான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
எம். இஸட். ஷாஜஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago