2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நல்லிணக்கம்...

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டிலான பருத்தித்துறையிலிருந்து தெற்குக்கு நடை பயணத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கையின் தேசியக் கொடியை அசைத்து, நேற்று ஆரம்பித்து வைத்தார்.

காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நிதி சேரிப்பதற்காக இந்த நடைபவனி நடத்தப்படுகின்றது. இந்த நடைபவனி பருத்தித்துறை முனையில் இருந்து இன்று ஆரம்பமாகியது.

ஆரம்ப நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நடைபவனி, கரவெட்டி பிரதேச செயலகத்தை வந்தடைந்த போது, கரவெட்டி பிரதேச செயலகத்தால் சேகரிக்கப்பட்ட 4 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் காசோலை பிரதேச செயலர் ச.சிவசிறி, ஏற்பாட்டாளர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து, நெல்லியடி வர்த்தக சங்கத்தினரால் 1 இலட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இந்த நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள், நடைபவனியில் கலந்துகொண்டவர்களுக்கு, குளிர்பானம் வழங்கினர். இந்த நடைபவனி இன்று மாலை வல்வையை அடைந்து, தொடர்ந்து நாளை அங்கிருந்து புறப்பட்டு, துரையப்பா விளையாட்டரங்கை அடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X