Editorial / 2026 ஜனவரி 02 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் தையிட்டி விகாரை பகுதிக்கு வெள்ளிக்கிழமை (02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக தனியார் காணி காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாராதிபதி அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன் ஒரு கட்டமாக தையிட்டிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாராதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டு சென்றார்.







அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .